• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சமந்தாவுக்கு நம்பிக்கை தந்த அல்லு அர்ஜுன்

நேரடி தமிழ்த் திரைப்படப் பாடல்கள் அளவிற்கு ஒரு மொழிமாற்றுபடத்தின் பாடலைரசிகர்கள் விரும்பி கேட்டுவருகிறார்கள் அது ‘புஷ்பா’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஓ சொல்றியா மாமா’ லிரிக் வீடியோ. யு டியூபில் வெளியான இரண்டு வாரங்களில்3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இந்தப் பாடலை ரசிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

]தெலுங்கில் 100 மில்லியன் பார்வைகளை இப்பாடல் நெருங்கி வருகிறது. இப்பாடல் குறித்து ஐதராபாத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுன், “இப்பாடல் மீது முதலில் சமந்தாவுக்கு நம்பிக்கையில்லை.

நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு அவர் நடித்துக் கொடுத்தார். இப்போது பாடல் உலக அளவில் பெரிய ஹிட் ஆகிவிட்டது,” என்றார்.அவரது பேச்சைக் குறிப்பிட்டு சமந்தா, “இனி எப்போதும் உங்களை நம்புவேன்,” என பதிலளித்துள்ளார். சமந்தாவின் பதிவிற்கு ஹார்ட்டின் எமோஜி பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜுன்.