• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அசுரன் படத்திற்காக மேலும் ஒரு விருதைப் பெற்ற தனுஷ்

Byமதி

Nov 29, 2021

52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவுடன் இணைந்து BRICS திரைப்பட விழாவும் நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் விழாவில், பல்வேறு படங்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேசிய விருதில் பல்வேறு விருதுகளைப் பெற்ற ”அசுரன்” படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறந்த நடிகைக்கான விருது ‘ஆன் வீல்’ என்ற பிரேசில் படத்தில் நடித்ததற்காக லாரா போல்டோரினிக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான விருது தென்னாப்பிரிக்க திரைப்படமான ‘பரகத்’ மற்றும் ரஷ்ய திரைப்படமான ‘தி சன் அபோவ் மீ நெவர் செட்ஸ்’ ஆகிய இரண்டு படங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டது.