• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

போட்டோவில் ஒன்றாக இணைந்து போஸ் கொடுத்த தனுஷ், ஐஸ்வர்யா..

Byகாயத்ரி

Aug 22, 2022

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சட்டப்படி பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் மீண்டும் இருவரையும் அவர்களது மகன் யாத்ரா சேர்த்து வைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் மகன் யாத்ரா படிக்கும் பள்ளியில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறையின் கேப்டனாக தனுஷ் மகன் யாத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்ததோடு இன்றைய திங்கட்கிழமை இதனை மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார். தனது மகனின் பள்ளிக்கு சென்ற ஐஸ்வர்யா இந்த நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் பார்த்துள்ளார். அதுமட்டுமன்றி இன்று தனுஷூம் இந்த விழாவுக்கு வந்துள்ளதை அடுத்து தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் ஒரே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தில் விஜய் ஜேசுதாஸின் குடும்பத்தினரும் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவு அறிவிப்புக்குப் பின்னர் மீண்டும் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.