• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

“டெக்ஸ்டர்” திரை விமர்சனம்!

Byஜெ.துரை

Mar 15, 2025

ராம் என்டர்டெய்னர்ஸ் சார்பில் எஸ்.வி.பிரகாஷ் தயாரித்து சூரியன்.ஜி. இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம்”டெக்ஸ்ட்டர்”.

இத் திரைப்படத்தில் ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ஹரிஷ் பெர்டி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா உட்பட மற்றும் பல நடித்துள்ளனர்.படத்தின் நாயகன் ராஜீவ் கோவிந்த், நாயகி யுக்தா பெர்வி,
இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் காதலித்து வருகின்றனர்.

காதலர்களான இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், திடீரென யுக்தா பெர்வி மர்ம நபர் ஒருவரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.காதலியை மறக்க முடியாமல் நாயகன் மிகுந்த மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவரது மனநிலை சென்று விடுகிறது.

நாயகனின் மன நிலைமையை மாற்றுவதற்காக அவரது நண்பர் மருத்துவரிடம் அவரது பழைய நினைவுகளை அளிக்க அழிக்க கூறியதோடு நாயகனின் சம்மதத்தோடு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பழைய நினைவுகளை இழந்தாலும், தனது காதலியை கடத்தி கொலை செய்தவனை கண்டு பிடிக்கும் முயற்சியில் இருந்த நாயகனுக்கு, தனது பள்ளி தோழி சித்தாரா விஜயனின் நட்பு கிடைக்கிறது.பழைய நினைவுகளை தொலைத்து தடுமாற்றத்தில் இருந்த நாயகனுக்கு சித்தாரா விஜயன் உடனான நட்பினால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் நேரத்தில், மீண்டும் மர்ம நபரால் சித்தாரா விஜயன் கடத்தப்படுகிறார்.

அவரை காப்பாற்ற போராடும் நாயகன் பள்ளி தோழியை காப்பாற்றினாரா? அல்லது தனது காதலியை இழந்தது போல் பள்ளி தோழியையும் இழந்தாரா? நாயகன் காதலியை கடத்தி கொலை செய்த மர்ம நபர் யார்?
என்பதுதான் படத்தின் மீதி கதை.

படத்தின் நாயகன் ராஜீவ் கோவிந்த், காதலி மீது வைத்திருக்கும் வெறித்தனமான அன்பை வெளிக்காட்டு வதிலும், தன் காதலியை இழந்த சோகத்தை வெளிக்காட்டும் காட்சிகளிலும் சரி சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிஷேக் ஜார்ஜ், சைக்கோ கொலையாளியாக நடிப்பில் அசத்தியுள்ளார்.

கதா நாயகி யுக்தா பெர்வி, கவர்ச்சியாக தாராளமாக மனதோடு நடித்திருக்கும் காட்சிகளில் பார்வையாளர்களை கிரங்கடித்து விடுகிறார். சித்தாரா விஜயன் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதா பாத்திரத்திற்கேற்றவாறு சிறப்பாக நடித்துள்ளார்.

ஹரிஷ் பெராடி அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, சிறுவர்கள் பெஹ்மின், பர்ஹான், ஜான்வி, சினேகல், ஆதித்யன் போன்றோர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.ஸ்ரீநாத் விஜயின் இசை மற்றும் பாடல், பின்னணி இசை காட்சிகள் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது. ஆதித்ய கோவிந்தராஜனின் ஒளிப்பதிவு கதைக்கேற்றவாறு பயணித்துள்ளது.