

குரோம்பேட்டை நாகல்கேனி அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை அடுத்த குரோம்பேட்டை நாகல்கேனி அரசினர் ஆதி திராவிட நலமேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள், இந்நாள் ஆசிரியர்கள் வெள்ளி விழா சங்கமம் நிகழ்ச்சி முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. விழாவில் 1988 முதல் 2000 ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களை சந்தித்து நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் தங்களது அனுபவங்களை முன்னாள் மாணவர்களுட்ன் பகிர்ந்து கொண்டனர். இதனை தொடந்து முன்னாள் மாணவர்கள் பிள்ளைகளின் கலை நிக்ழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கு தந்தை ஜேசுதாஸ், தம்புராஜ், வழக்கறிஞர் கார்த்திகேயன், லோகேஸ்வரி, செந்தில் மற்றும் வழக்கறிஞர் தாமஸ் உட்பட முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

