• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

Byகுமார்

Jan 7, 2022

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த வகையில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்களுக்கு தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் அனைத்து திருக்கோயிலுக்குள் வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்கிற நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது மார்கழி மாதம் என்பதால் அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஆன்மீக வழிபாட்டிற்காக ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மீனாட்சி அம்மனை தரிசிக்க வந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.