• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நான்கு நாட்களுக்கு சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

Byவிஷா

Jul 13, 2023

பிரதோசம் மற்றும் அமாவசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். ஒவ்வொரு மாதமும் இந்தக் கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி அந்த நாட்களில் மட்டுமே பக்தர்களும் மலையேறவும், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.
அந்தவகையில், வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இபிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல ஜூலை 15 முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.