

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் டாக்டர் சௌமியா அன்புமணி சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த, பா.ம.க. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான டாக்டர் சௌமியா அன்புமணி மற்றும் இவர்களின் மகள் சஞ்ஜுமித்ரா இருவரும் நேற்று இரவு திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். டாக்டர் சௌமியா அன்புமணிக்கு, பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா தலைமையில், பாமக கட்சியினர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். ஸ்ரீஆண்டாள் கோவில் நிர்வாகம் சார்பில், டாக்டர் சௌமியா அன்புமணிக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, ஆண்டாள் மாலை, கிளி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாமக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

