• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேவர் ஜெயந்தி விழா.. விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து

ByA.Tamilselvan

Oct 26, 2022

தேவர் ஜெயந்திவிழாவிற்கு வருகை தரும் வாகனங்கள் கட்டுப்பாடுகளை மீறி விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா அக்டோபர் 28, 29, 30 தினங்களில் நடைபெற உள்ளது.
இதில் தமிழக முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர். தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் குருபூஜை விழாக்களின் போது, வாகனங்கள் ஓட்டுவதில் விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநரின் லைசென்ஸை ரத்து செய்யது நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் வாகனங்களை அத்துமீறிய வேகத்தில் இயக்குவது, வாகனங்கள் மேல் அமர்ந்து செல்வது உள்ளிட்டவற்றிற்குத் தடை.விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் மீறி விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என – மதுரை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.