இந்திய வேளாண்மை மற்றும் இந்திய விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர் அவற்றில் சில இயற்கை காரணிகளாகவும் வேறு சில செயற்கை காரணிகளாகவும் உள்ளன அவை
சிறிய மற்றும் குறுநில உடமை
இந்தியாவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மற்றும் தீவிர பயிர் சாகுபடி செய்யும் மாநிலங்களில் சிறிய மற்றும் துண்டாக்கப்பட்ட நில உடமையாளர்கள் அதிகம் உள்ளனர்.
இந்தியாவில் 67% நில உடமையாளர்கள் ஒரு ஹெக்ட்டாருக்கும் குறைவு குழு விவசாயிகளாக உள்ளனர்.
அதிக செலவின உள்ளீடுகள் அதிக விளைச்சலுக்கும் தொடர்பு வேளாண் உற்பத்திக்கும் விதைகள் அடிப்படையான ஒரு உள்ளீடாகும்.
அதிக விலையின் காரணமாக நல்ல தரமான விதைகள் சிறு குரு விவசாயிகளுக்கு எட்டாம் கனியாக உள்ளது.
வலமற்ற மண்
இந்திய மண் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்த வளம் கூட்டல் மற்றும் புதுப்பித்தல் செயல்பாடு இன்றி வேளாண்மைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் மண்ணின் வளம் குன்றி அதன் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன பற்றாக்குறை
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு வேளாண் நிலப்பகுதியே பாசன வசதி பெற்றிருக்கின்றது வேளாண்மையின் நம்பகத்தன்மைக்கு நீர் பாசன வசதிகள் உருவாக்கப்பட வேண்டும்.
இயந்திரமயமாக்க பற்றாக்குறை
நாட்டின் பல பகுதிகளில் வேளாண்மை பெரிய அளவில் இயந்திரம் பக்கம் இருப்பின் பெரும்பாலான பகுதிகளில் மனிதர்களைக் கொண்டு எளிய மற்றும் பழமையான கருவிகள் மூலமே வேளாண்மை செய்யப்படுகிறது.
மண் அரிப்பு
காற்று மற்றும் நீரின் மூலமான மண்ணரிப்பில் பெரும் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பகுதிகளை கண்டறிந்து சரியான முறையில் மீண்டும் அதனை வளமையானதாக மீட்டு உருவாக்கம் செய்தல் வேண்டும்.
வேளாண் சந்தை
இந்தியாவின் கிராம விவசாய பொருட்களின் சந்தை மோசமான சமத்திலே காணப்படுகிறது. தரமான உள்கட்ட அமைப்பு வசதிகள் இன்மையால் விவசாயிகள் உள்ளூர் வியாபாரிகளிடம் விவசாய பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள். மேலும் விவசாய பொருட்களின் விலை அதிகமாக ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.
சேமிப்பு கிடங்கு வசதயில்லாமை
கிராமபுற பகுதிகள் விவசாய சேமிப்பு தொடங்குங்கள் வசதியற்றோ அல்லது முழுமை பெறா நிலையிலோ காணப்படுகிறது இத்தகைய சூழலில் விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தையில் விற்கும் கட்டாய விலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
போக்குவரத்து வசதியின்மை
இந்திய வேளாண்மையின் முக்கிய சவால்களில் ஒன்று மலிவான மற்றும் போதுமான போக்குவரத்து வசதியின் உண்மையாகும். தற்சூழலில் லட்சக்கணக்கான கிராமங்களில் பிராதன இணைப்புச் சாலைகள் இல்லாமலே அல்லது சந்தை மையங்களுடன் இணைக்கப்படாமல் உள்ளது.
மூலதன பற்றாக்குறை
வேளாண்மை அதிக மூலதனம் தேவைப்படும் தொழில்களில் ஒன்றாகும் மேம்படுத்தப்பட்ட பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க மூலதன முக்கிய பங்கு வைக்கிறது
தாவர உயிர் நுட்பவியல் வளர்ச்சி
தாவர உயிர் நுட்பவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் மூலக்கூறுகள் உயிரியல் (Molecular Biology) மற்றும் உயிர் நுட்பவியல் (Bio- Technology) ஆகியவற்றில் கற்பித்தல் மற்றும் பயிற்சி அளிக்கவும் 1985 ஆம் ஆண்டு தேசிய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது.
இந்திய வேளாண்மையில் உள்ள சவால்கள்
இந்திய வேளாண்மை ஒரு பருவக்காற்றின் சூதாட்டம் என வர்ணிக்கப்படுகிறது.
பெருகிவரும் சாலைகள் ரயில் பாதைகள் மற்றும் கால்வாய்களின் கட்டுமானப் பணியாள் மழை நீர் இயல்பான ஓட்டம் தடுக்கப்பட்ட அதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இயற்கையான வடிகால் அமைப்பில் நீரோட்ட தடை ஏற்படுகிறது.
தொழிற்சாலைகளும் குடியிருப்பு கட்டிடங்களும் கட்டப்பட்டு வருவதால் வேளாண் நிலங்களில் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயிர்கள் மண் கால்நடைகள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவற்றின் மூலம் வேளாண்மையும் பாதிக்கப்படுகின்றது.
சுற்றுச் சூழ்நிலை மற்றும் இயற்கை வளங்கள் சீர்கேடு அடைவதால் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
தொழிற்சாலைகள் மற்றும் சேவை துறை காட்டிலும் வேளாண் துறையின் வளர்ச்சி குறைவாக உள்ளது.
மாறி வரும் வேளாண்மை கூறுகள்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் தரமணியில் உள்ள எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையமும் இவ்வகை முயற்சியில் நிலைத்த முன்னேற்றம் அடைய வழி வகுக்கின்றனர்.
- நுண்ணிய நீர்ப்பாசனம் (Micro Irrigation)
- ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு (Integrated Pests Control Management)
- அசோலா போன்ற நுண்ணுயிர் வளர்ப்பு (Microbial Culture like Azolla)
- புவியியல் தகவல் அமைப்பு (GIS) மற்றும் உலகளாவிய இடம் சூட்டும் அமைப்பு GPS/GNSS இவற்றைக் கொண்டு செயல்படும் துள்ளிய வேளாண்மை முறை