• Mon. Feb 26th, 2024

இந்திய வேளாண்மை ,பருவகாலங்கள் பற்றி விவரிக்கிறார் – முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி

Byதரணி

Oct 26, 2022

இந்தியாவின் முழுமைக்குமான பருவகாலங்கள், மற்றும் வேளாண்மை முறைகள் குறித்து முதுமுனைவர் அழகுராஜா பழனிசாமி நுட்பமான ஆய்வுகளின் மூலம் புதிய பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தென்இந்தியா,மற்றும் வடஇந்தியாவில் பருவகாலங்களுக்கு ஏற்ப நடைபெறும் விவசாய முறைகள் குறித்து பயிரிடப்படும் பயிர்கள் குறித்து முதுமுனைவர் அழகுராஜாபழனிசசாமி கூறும் போது..
காரிப்பருவம் நெல், பருத்தி, மக்காச்சோளம் நெல் கேழ்வரகு மக்காச்சோளம்,(ஜூன், செப்டம்பர்) சோளம், கம்பு, உளுந்து கம்பு, நிலக்கடலை, ராபி பருவம் கோதுமை, பருப்பு , நெல் மக்காச்சோளம் கேழ்வரகு,(அக்டோபர், மார்ச்) ஆளி விதைகள், கடுகு, பார்லி நிலக்கடலை கம்பு, சையத் பருவம் காய்கறிகள், பழங்கள் நெல் காய்கறிகள் தீவனப்(ஏப்ரல் ஜூன்) திணைப்பயிர்கள்பயிர்கள்
சாகுபடி முறை
ஒரு பயிர் சாகுபடி முறை (Mono Cropping) என்பது ஒரு பருவத்தில் அல்லது ஒரு வருடத்தில் ஒரே பயிரை விளைவிப்பது
இரு பயிர் சாகுபடி முறை (Dual Cropping) என்பது ஒரு வருடத்தில் ஒரே நிலத்தில் இரு முறை விளைவிப்பது.பல பயிர் சாகுபடி முறை (Multiple Cropping) என்பது ஒரு நிலத்தில் பல்வேறு பயிர்களை ஒரே வருடத்தில் விளைவிப்பது.கலப்பு சாகுபடி முறை என்பது (Mixed Cropping) ஒரே நிலத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்களை விளைவிப்பது ஆனால் ஒவ்வொரு பயிருக்கும் அறுவடை காலம் மாறுபடும்.பயிர் சுழற்சி முறை என்பது (Crop Rotation) பல்வேறு பயிரினை உரை நிலத்தில் வரிசைக்கிரமமாக ஒரே வருடத்தில் பயிரிடுவது.
இந்தியாவின் முக்கிய பயிர்கள்
இந்தியாவின் சாகுபடியாகும் முக்கிய பயிர்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம் 1)உணவு பயிர்கள் கோதுமை, மக்காச்சோளம், திணை பயிர்கள், பருப்பு இன்னும் புற 2) வாணிப பயிர்கள் கரும்பு, புகையிலை, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள்3) தோட்டப்பயிர்கள் தேயிலை, காபி, ரப்பர் ,4) தோட்டக்கலை பயிர்கள், பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகள்
1) உணவு பயிர்கள்
நெல்- நெல் இந்தியாவின் பூர்வீக பயிராகும் உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்திய இரண்டாம் இடத்தை வைக்கிறது. இது ஐன மண்டல பைராகும் 24 சதவீதம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் 150 சென்டிமீட்டர் ஆண்டு மழை அளவும் உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது.வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது நெல் பயிரிட அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தியாவில் நெல் மூன்று முறைகளில் பயிரிடப்படுகிறது
1) விதைத்தூவல் முறை,2) ஏர் உழுதல் அல்லது துளையிடும் முறை ,3) நாட்டு நடுதல் முறை
அதிக விளைச்சல் தரும் விதைகளான CR தான் 205 A.R, தான் 306 CRR – 451 போன்றவைகள் அதிகரித்ததின் காரணமாக பலமையான நெல் வகைகள் மறைந்து போயிற்று.மேற்கு வங்கம் முதல் மாநிலம் உத்தரப்பிரதேசம் பஞ்சாப் தமிழ்நாடு ஆந்திர பிரதேசம் பீகார் சத்தீஸ்கர் ஒடிசா அசாம் மற்றும் சரியான ஆகிய மாநிலங்கள் 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி அரிசி உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ளன.


தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம் நெல் உற்பத்தியில் சிறப்பான அம்சங்களை பெற்றுள்ளது. சம்பா குருவை காலாடி என ஒரு ஆண்டில் மூன்று வகைகளில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது சம்பா என்பது நீண்ட கால பயிர் இது ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை வளர்கிறது. குருவை மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் வளர்கிறது முன்னர் அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் உள்ள நெல் தாள்களுடன் உழுது பயிர் செய்யும் முறையே காலாடி என்று உள்ளூர் வழக்கு சொல்லில் கூறப்படுகிறது.காவிரி டெல்டா பகுதி தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஆடுதுறையில் அமைந்துள்ளது தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் திருவாரூர் கிளை வி கியூ சி 174 என்ற புதிய நிர்வாகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்நெல்வகை ஏக்கருக்கு 4500 கிலோ நெல் உற்பத்தி செய்ய உள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
கோதுமை
நெற்பயிருக்கு அடுத்தார் போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது கோதுமை ஆகும்
நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் 24 சதவீதமும் மொத்த உணவு பயிர் உற்பத்தியில் 54 சதவீத பங்கையும் கோதுமை வைக்கிறது.பயிர் விதைக்கும் பருவத்தில் 10 – 15 டிகிரி செல்சியஸ் வெப்பமும் முதிர் பருவத்தில் 20 -25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் தேவைப்படுகிறது.சுமார் 85 சதவீதத்திற்கும் மேலான கோதுமை உற்பத்தி உத்திர பிரதேசம் பஞ்சாப் ஹரியான ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது.குஜராத் மாநிலங்களின் கரிசல் மண் பிரதேசமும் கோதுமை உற்பத்தியில் ஒரு முக்கிய பங்களிப்பினை அளிக்கிறது.கோதுமை ஒரு மிதவெப்ப மண்டல பயிராகும்.உலகின் 25 சதவிகிதம் நிலப்பகுதி கோதுமை பயிரிட பயன்படுகிறது.கோதுமை ஒரு முக்கிய உணவுப் பயிராகும் இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் போதுமே பயிர் குளிர் காலம் மற்றும் வசந்தகால பெயராகவும் பயிரிடப்படுகிறது .கோதுமை பயிருக்கு 15 டிகிரி செல்சியஸ் முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை உள்ள தட்பவெப்பு நிலையை ஏதுவான வெப்பநிலையாகும்.இதற்கு 50 – 60% சராசரி மலை அளவு தேவைப்படுகிறது களிமண் அல்லது வண்டல் மண் கலந்த களிமண் கோதுமை வளர உகந்த மண் ஆகும்.
உலகின் மிகப்பெரிய கோதுமை விளைவிக்கும் பகுதிகள் . சீனா,உத்தர பிரதேசம் பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் அதிக அளவு கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலம் ஆகும்.

சோளம்
நம் நாட்டின் மூன்றாவது முக்கிய உணவுப் பயிர் சோழமாகும் இது ஆப்பிரிக்காவை பூர்விமாகக் கொண்ட பெயராகும்.
இப்பயிர் வறட்சியான கால நிலையிலும் நன்கு வளரக்கூடியது இத்தானியத்தில் கார்போஹைட்ரேட் புரதச்சத்து தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.இது பெரும்பாலான ஏழை மக்களுக்கு மலிவான உணவாக விளங்குகிறது.இது நாட்டில் பல பகுதிகளில் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கிய பயிர் ஆகும்.மகாராஷ்டிரா கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் இவற்றின் முதன்மை உற்பத்தியாளர் ஆகும்.
கம்பு
கம்பு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஒரு பயிராகும். இது ஏழை மக்களின் ஒரு முக்கிய உணவு பயிர் ஆகும் கம்பு பயிரின் தண்டு பகுதி கால்நடைகளுக்கு தீவனமாகவும் வீட்டுக்கு கூரை மேய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இது வறண்ட பகுதிகளின் நன்கு வளரக்கூடியது.இந்தியாவில் ராஜஸ்தான் முதன்மை உற்பத்தியாளர் ஆகும் அதை தொடர்ந்து உத்தரபிரதேசம் ஹரியானா குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிக உற்பத்தியை தருவிகளாகவும் உள்ளன.
வாற்கோதுமை (பார்லி)
பார்லி நம் நாட்டின் முக்கியமான தானிய பயிர்களின் ஒன்றாகும் இது ஏழைகளின் முக்கிய உணவாக மட்டும் இல்லாமல் பார்லில் நீர் நீர் மற்றும் விஸ்கி தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள் இரண்டும் இவற்றின் முதன்மை உற்பத்தியாளர் ஆகும் பருப்பு வகைகள் பருப்பு வகைகள் அவரை இனத்தைச் சார்ந்த பல் பயிர்களை உள்ளடக்கியதும் தாவர புரதச்சத்து செய்ததும் ஆகும்.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் அவரை இனத்தைச் சேர்ந்த பல பயிர்களை உள்ளடக்கியதும் தாவர புரதச்சத்து சிறிதும் ஆகும்.இவை மனிதர்களுக்கு உணவாகவும் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.இவை வளிமண்டல நைட்ரஜனை கிரகித்து மண்வளத்தை அதிகரிக்கிறது எனவே இப்பயிர்கள் பயிற்சி பயிரிட முறையில் வழக்கமாக பயிரிடப்படுகிறது.
உலகில் அதிக பரப்பு உற்பத்தியை செய்யும் நாடு இந்தியாவாகும் மத்திய பிரதேசம் உத்திரப்பிரதேசம் ராஜஸ்தான் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்கள் வற்புறுத்தியில் முதன்மை மாநிலங்களாகும்.
2) வாணிபப் பயிர்கள்
வணிக நோக்கத்திற்காக பயிரிடப்படும் பயிர்களை வாணிப பயிர்கள் என அழைக்கின்றோம்.
வாணிப பயிர்கள் கரும்பு புகையிலை இலை பயிர்கள் பருத்தி மற்றும் சணல் மற்றும் எண்ணெய் வித்துக்களை உள்ளடக்கியதாகும்.

கரும்பு
கரும்பு ஒரு உயரமான அயன மண்டல புல் வகை தாவரமாகும் இது 3.5 மீட்டர் வரை வளரக்கூடிய தாவரமாகும்.
இது அயனம் மற்றும் துணை அயன மண்டல பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வளர்க்கப்படும் பைராகும் இந்தியா கரும்பு உற்பத்தியில் பிறப்பிடமாகும் கரும்புறு பட்டியில் குறைசலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
கரும்பு வளர சராசரியாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பமும் ஆண்டு முழுவதும் தேவைப்படுகிறது.கரும்பு இந்தியாவின் மிக முக்கியமான வாணிப பயிராகும்.இந்தியா கரும்பில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் ஆகும்.
இப்பயிர் சர்க்கரை தொழிற்சாலைக்கு மூலப்பொருளை அளிக்கிறது இது நம் நாட்டின் இரண்டாவது பெரிய தொழிற்சாலை பிரிவாகும்.சர்க்கரை உற்பத்தியை தவிர வெள்ளம் நாட்டுச்சக்கரை சாராய தொழிற்சாலைகள் கரும்புச்சாறு மற்றும் காகித தொழிற்சாலைக்கு தேவையான கரும்பு மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் உத்திரபிரதேசம் இதன் முதன்மை உற்பத்தியாளர் ஆகும் அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா கர்நாடகா தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை கரும்பு அதிக உற்பத்தி செய்யும் பிற மாநிலங்களாகும் .
பருத்தி
இந்தியாவின் முக்கியமான வாணிப பயறுகள் ஒன்றாகும் இது இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சாலை பிரிவுக்கு மூலப் பொருட்களை அளிக்கிறது.பருத்தி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.குஜராத் மகாராஷ்டிரா ஆந்திரா பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்கள் மொத்த பருத்தி உற்பத்தியில் 79% பங்களிப்பு வழங்குகின்றன.பருத்தி அயன மற்றும் துணை அயனப்பகுதியில் மட்டுமே விளைவிக்கும் இலை பயிர் ஆகும். இழையிலிருந்து விதைகளைப் பிரிக்கும் முறையே ஜின்னிங் (Ginning) எனப்படும்.தட்பவெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் பயண மண்டல 50-100 சென்டிமீட்டர் மழை அளவு உள்ள பகுதிகளில் பருத்தி விளைகின்றது.கரிசல் மண் மற்றும் வண்டல் மண் பருத்திப் பயிர்களை ஏற்ற மண் ஆகும்.இந்தியாவில் மகாராஷ்டிரா குஜராத் தமிழ்நாடு இது தற்போது மற்றும் விதவை வெப்பமண்டல காலநிலை நன்றாக வளர்கிறது பரிசல் பருத்தி பயிரிடுவதற்கு ஏற்ற மண் ஆகும்.பருத்தி உற்பத்தியில் இந்தியா நான்காம் இடத்தை வைக்கின்றது.தமிழ்நாட்டின் மிக முக்கிய இழப்பையே பருத்தியாகும் பருத்திக்கு உகந்த மண் கரிசல் மண் ஆகும்.எம்.சி.யூ 4, எம்.சி.யூ5,ஆர்.எ.5166 போன்ற பருத்தி ரகங்கள் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது.
சணல்
சணல் என்பது மிருதுவான நீளமான பளபளக்கும் தாவர இலையாகும். சணல் பருத்திக்கு அடுத்தபடியாக உள்ள மிக முக்கியமான இழப்பயிர் இது தங்க இல பெயர் என அழைக்கப்படுகிறது. சணல் ஒரு வெப்பமண்டல இலை பயிர் ஆகும் இது வண்டல் மண்ணில் நன்கு வளரும் இது சணல் தொழிற்சாலைக்கு மூலப்பொருள் அளிக்கிறது. கோணிப்பைகள் கம்பளங்கள் கயிறு நூலிலேகள் போர் வகைகள் துணிகள் தார்பாலின் திரை சிலைகள் போன்ற பொருட்கள் தயாரிக்க சணல் நார் பயன்படுத்தப்படுகிறது. சணல் பயிரிடுவதிலும் உற்பத்திகளும் மேற்குவங்க மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது மேகாலயா சனல் பயிரிடும் மற்ற மாநிலங்களாகும். 30 டிகிரி செல்சியஸ் உள்ள அதிக வெப்பமும் 150 சென்டிமீட்டர் மேலான மழை அளவு சணல் வளர தேவைப்படுகிறது வண்டல் மண் சடல் விளைவிக்க ஏற்ற மண் ஆகும். புதுப்பிக்கப்படும் வண்டல் மண்ணை கொண்டு வெள்ளை சமவெளிகளில் உள்ள மண் நீர் வடிவம் செழிப்பான மண்ணாக இருக்க வேண்டும். சணல் செடிகளை நீரில் ஊற வைத்து மக்கச்செய்து இலைகளை பிரித்தெடுக்கும் செய்கைக்கு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றன. ஊறவைத்து மக்கள் செய்தல் என்பது ஒரு நுண் உயிரியல் (Mi-Crobiological செய்முறைகளாகும் இந்தியாவும் வங்காளதேசமும் கடல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடுகளாகும்.
4)தோட்டப்பயிர்கள்
தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது. இவை மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணையாக உள்ளது. கடற்கரை பகுதிக்கு அருகாமையில் பயிரிடுதல் இவற்றின் ஏற்றுமதிக்கு உகந்ததாக அமையும். தேயிலை காபி, ரப்பர் மற்றும் வாசனைப் பொருட்கள் ஆகியவை இந்தியாவின் முக்கிய தோட்ட பயிராகும்
தேயிலை
தேயிலை அயன மண்டலம் மற்றும் உப அயண மண்டல காலநிலைகளில் வளரும் ஒரு பசுமையான தாவரமாகும்.
தேயிலை பயிரிட அதிக தொழிலாளர்களும் மிதமான நிழலும் அதிக மழை அளவு தேவை.இது 1.5 சென்டிமீட்டர் நீளம் வரை வளரும் தன்மை உடையது.தேயிலை முக்கிய பண பெயராகும். தேசிய அளவில் அசாம் மாநிலத்தை தொடர்ந்து தேயிலை பயிரிடும் பரப்பினும் உற்பத்தியிலும் தமிழ்நாடு இரண்டாம் நிலை வைக்கிறது.தேயிலையின் இலைகள் வானம் தயாரிக்கும் அயண மண்டலச் செடியாகும்.இந்தியாவில் அஸ்ஸாம் மேற்கு வங்காளம் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வளர்க்கப்படுகிறது.
இந்தியாவில் பயிரிடப்படும் இரண்டு முக்கிய தேயிலை வகைகள்
1)பூசி(BOHEA) – சீனாவின் பிறப்பிடம் ,2) அசாமிகா(ASSAMICA) இந்தியாவின் பிறப்பிடம்.
இவ்விரண்டின் கலப்பின் மூலம் பல வீரியம் உள்ள தேயிலை உருவாக்கப்பட்டுள்ளன உலக தேயிலை உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம் அசாம் ஆகும் தமிழ்நாடு கேரளா மற்றும் மேற்கு வங்காள தேயிலை பெறுவதற்கு மற்ற மாநிலங்களாகும்.

காபி
இவை நிழல்களில் நன்றாக வளரக்கூடியது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் முதல் 1500 மீட்டர் உயரம் கொண்ட மலைச்சரிவுகளின் நன்றாக வளர்கிறது.காபியில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.1)அரேபியா தரம் இருப்பதும் இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது.2)ரொப்ஸ்டா – தரம் குறைந்த வகை
காபி சாகுபடியிலும் கர்நாடகத்தினை அடுத்து தமிழ்நாடு தேசிய அளவில் இரண்டாம் இடம் நிலையில் உள்ளது இரண்டாம் நிலையில் உள்ளது.ஆண்டிபட்டி சிறுமலை சேர்வராயன் மலைப்பகுதியில் தொழிலும் காபி சாகுபடி செய்யப்படுகிறது.உலக காப்பி உற்பத்தியில் இந்தியா ஏழாவது இடத்தை வைக்கிறது இந்தியாவில் காப்பி உற்பத்தியில் கர்நாடக முதன்மையான உற்பத்தியாளராக திகழ்கிறது.இம்மாநிலம் இம்மானியம் இந்திய உற்பத்தியில் 71% உலக உற்பத்தியில் 2.5% சதவீதத்தையும் அளிக்கிறது.
இரப்பர்
1902 ஆம் ஆண்டு கேரளாவில் முதன்முதலில் ரப்பர் தோட்ட உருவாக்கப்பட்டது.வெப்ப ஈரப்பதம் அயன மண்டல காலநிலை ரப்பர் பயனடைய ஏற்றதாகும் வெப்பநிலை செல்சியஸிற்கும் அதிகம் மழைப்பொழிவு 300 சென்டிமீட்டருக்கு மேல் பெரும்பாலான ரப்பர் தோட்டங்கள் சிறு நில உடமையாளர்களிடம் உள்ளன
கேரளா தமிழ்நாடு கர்நாடகா மற்றும் அந்தம்மா நிக்கோபார் தீவுகள் ரப்பர் உற்பத்தியில் முக்கியமான பகுதிகளாகும்.
ரப்பர் பயிரிடப்படும் பரப்பளவில் இந்தியா ஆறாவது இடத்தையும் ரப்பர் உற்பத்தியில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.மிளகு கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மலைச்சரிவுகளிலும் முந்திரி கடலூர் மாவட்டத்திலும் பயிரிடப்படுகிறது.
நறுமண பயிர்கள்
பழங்காலம் தொட்டே நறுமண பொருட்களுக்கு இந்தியா உலகப் புகழ்பெற்றதாகும்.இந்நறுமணப் பொருட்கள் பெரும்பாலும் உணவிற்கு சுவையூட்டியாகவும் மருந்து பொருட்கள் மற்றும் சாயங்கள் தயாரிக்கும் பயன்படுகிறது.
மிளகு, மிளகாய், மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், இளவங்கம், பட்டை மற்றும் பாக்கு போன்ற நறுமண பொருட்கள் இந்தியாவில் பயிரிடப்படுகின்றன கேரளா நறுமண பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதன்மையான மாநிலம் ஆகும்.
புகையிலை
1508 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியரால் முதன்முதலாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது என கூறுவார்.
புகையிலை உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை பெறுகிறது மற்ற இரு முன்னணி வைக்கும் நாடுகள் சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகும் இந்தியாவில் புகையிலை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் தமிழ்நாடு ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா.தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய பணப்பயிர் புகையிலை ஆகும்.பழங்கள் மற்றும் காய்கறிகள்,பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை வைக்கிறது.
உலக காய்கறிகள் உற்பத்தியில் 13 சதவீதத்தை இந்தியா அளிக்கிறது.எண்ணெய் வித்துக்கள்உலகில் என்னை வித்துக்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முக்கிய இடம்பெறும் மாநிலங்கள் குஜராத் மகாராஷ்டிரா தமிழ்நாடு. சூரியகாந்தி அவரை ஆமணக்கு தேங்காய் மற்றும் பருத்தி விதை ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய எண்ணெய் வித்து பயிர்கள் ஆகும்
திணை வகைகள்
உணவு பயிர் உற்பத்தி செய்வதில் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்ததாக திணை வகை முக்கிய பங்கு வைக்கின்றனர்.
செழிப்பற்ற மண்ணில் வளரக்கூடியவை.
பருப்பு வகைகள்
புரதச்சத்து மிக்க அவரை இனத்தைச் சார்ந்த பயிர் வகைகளை பருப்பு வகைகள் ஆகும்.
பட்டாணி ,துவரை போன்றவை முக்கிய பருப்பு வகைகளாகும்.
தோட்டக்கலை பயிர்கள்
தோட்டக்கலை பயிர்கள் என்பது பழங்கள் மலர்கள் மற்றும் காய் வகை பயிர்களை குறிக்கிறது.
உடல் நலத்திற்கு தேவையான தாது சத்துக்கள் வைட்டமின்கள் நார்ச்சத்துக்கள் பழங்கள் மற்றும் காய் வகைகள் அதிகம் உள்ளதால் இவை மனிதர்களின் அன்றாட உணவில் ஒரு பெரும் முக்கிய பங்கு வைக்கிறது.
பழங்கள் மற்றும் காய்கறி காய் வகைகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் இருக்கிறது.
ஆப்பிள் இமாச்சலப் பிரதேசமும் ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அதிகம் விளைகின்றது .
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழை இலை பயிரிடப்படுகிறது மகாராஷ்டிரா உத்தரகாண்ட் இமாச்சலப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆரஞ்சு மற்றும் திராட்சை பயிரிடப்படுகிறது.உலக காய் வகைகள் உற்பத்தியில் இந்தியா மட்டும் 13% அளிக்கிறது.
இந்தியாவின் முக்கிய வேளாண் புரட்சிகள்
மஞ்சள்ப் புரட்சி – எண்ணெய் வித்துக்கள் (குறிப்பாக கடுகு மற்றும் சூரியகாந்தி,
நீலப் புரட்சி – மீன்கள் உற்பத்தி ,பழுப்புப் புரட்சி- தோல், கோக்கோ, மரபுசாரா உற்பத்தி
தங்க நூலிழைப் புரட்சி -சணல் உற்பத்தி ,பொன் புரட்சி – பழங்கள் தேன் மற்றும் தோட்டக்கலைப் பயிர்
சாம்பல் புரட்சி -உரங்கள் ,இளஞ்சிவப்புப் புரட்சி – வெங்காயம் மருந்து பொருட்கள் இறால் உற்பத்தி
பசுமைப் புரட்சி அனைத்து வேளாண் உற்பத்தி,வெள்ளிப் புரட்சி -முட்டை மற்றும் கோழிகள்
வெள்ளிப் இழைப் புரட்சி- பருத்தி ,சிவப்புப் புரட்சி-இறைச்சி உற்பத்தி தக்காளி உற்பத்தி
வட்டப் புரட்சி உருளைக்கிழங்கு, பசுமைப் புரட்சி -உணவு தானியங்கள், வெண்மைப் புரட்சி பால் உற்பத்தி
இந்த கட்டுரை மூலம் இந்தியாவின் பல தரப்பட்ட விவசாய முறைகள், பருவகாலங்கள், பயிர்வகைகள் குறுத்து பேராசிரியர் அழகராஜா பழனிசாமி அற்புதமாக விவரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *