தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் சேர்க்கை விலையேற்றத்தால் தொழிலாளர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதால் முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் கொரோனா தடை உத்தரவு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுமான தொழில் கடுமையாக முடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் சிமெண்ட், கம்பி, செங்கல், எலக்ட்ரிக் பொருள்களின் விலையை அளவுக்கதிகமாக உயர்த்தி வருகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் 30% கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இதில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே தமிழக முதல்வர் இந்த செயற்கையான விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்தி கட்டுமான தொழிலுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வலியுறுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கட்டுமான பொறியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.