புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்மத்தைக் கண்டித்தும் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக சைதாப் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததைக் கண்டித்தும்,தொடர்ந்து பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்மத்தைக் கண்டித்தும் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக சைதாப் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர்களைச் சந்தித்திப்பின் போது கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி கூறியதாவது
குடிநீரில் மலம் கலந்த விவகாரம் இந்த ஆட்சியில் தீண்டாமையும்,வன்கொடுமையும் நிறைந்து இருப்பதைக் காட்டுகிறது.மாவட்ட ஆட்சியர் துரிதமாக நடவடிக்கை எடுத்த நிலையிலும்,சென்னையிலிருக்கும் மிக முக்கியமானவர்களால் அவருடைய செயலும் பாதிக்கப் பட்டுவிட்டது,உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்டுவதில் தாமதம் ஏற்படுகிறது.ஆளுநரை அவமதிக்கும் வகையில் நேற்று சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகளால் ஆளுநர் வெளிநடப்பு செய்து விட்டார்.திராவிட மாடல் ஆட்சியென்றும் நீதிக்கட்சியினால் தோன்றியதென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள் ஆனால் பெரியாரின் சமத்துவத்தை பின்பற்றுபவர்களின் ஆட்சியிலா இவ்வளவு தீண்டாமை செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது.ஆளும் ஆட்சியை கண்டிக்கிறோம்.மிக முக்கியமாக இன்றளவிலும் இப்படிப் பட்ட தீண்டாமை செயல்கள் நடந்து கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது.
19 மாதங்கள் தான்ஆகிறது இந்த ஆட்சியில் உள்ளவர்கள் பொறுப்பேற்று அதற்குள் எத்தனை தீண்டாமை,வன்கொடுமை செயல்கள் நடந்திருக்கின்றன.அரசு உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.