• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

போதைப்பொருள் கடத்தப்படுவதை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

ByJeisriRam

May 3, 2024

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தெப்பம்பட்டி சாலைப்பிரிவில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பாக போதை பொருட்களை தடுக்கத்தவறிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் 65 வயது அமைப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் பாரதி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவிற்கு குஜராத் மாநிலம் கடல் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கத்தவறிய மத்தியஅரசை கண்டித்தும், இந்தியப்பிரதமர் மோடியின் செயலற்ற தன்மையை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கலந்து கொண்டனர்.