• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராமநாதபுரத்தில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடந்த நவம்பர் 21ம் தேதி கட்டவிளாகம் கிராம உதவியாளர் சுரேஷ் மணல் திருட்டை தடுக்கச் சென்ற போது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவரது செல்போனை பிடுங்கி வீசியும், இரண்டு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கினர்.


இந்த மணல் திருடர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் இதுவரை கைது செய்த செய்யாத காவல்துறையை கண்டித்து, தங்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் திருவாடானை வட்டார கிளை தலைவர் நம்பு ராஜேஷ் தலைமையில் அதன் மாவட்ட பொறுப்பாளர் சக்திவேல். மாநில கிராம உதவியாளர் சங்க மாநில பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாடானை ஆர்எஸ் மங்கலம் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தாசில்தார் செந்தில் வேல்முருகன் தலைமையில் காவல்துறை சார்பில் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளுன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைத செய்யப்படும் என உறுதி அளித்துள்ளனர். அதன்பேரில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று முடிவடைந்துவிடும் தவறும் பட்சத்தில் மாவட்ட அளவில் போராட்டங்கள் தொடரும் எனவும் தெரிவித்தார்கள்.