மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கம் ரேஷன் கடை விற்பனையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் அறிவுத்தலின் படி, மேற்கு மாவட்ட பட்டியல் அணி துணைத் தலைவர் கதிரேசன் தலைமையில், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் காளிதாஸ், மாநகர மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் ஆகியோர் மனு ஒன்று அளிக்க வந்திருந்தனர்
அம்மனுவில் மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி, செம்பூரணி ரோட்டில் மதுரை கிழக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் EP015 என்ற எண்ணுள்ள ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது கடையின் விற்பனையாளராக மீனாட்சி சுந்தரம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த ரேஷன் கடையில் அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் அம்பேத்கர் நகர் மற்றும் பூந்தோட்ட நகர் பகுதியை சேர்ந்த சுமார் 2000 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி பயன்படுத்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மாதந்தோறும் வழங்கக்கூடிய பாமாயில், கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. மேலும் அரிசி, பருப்பு, சீனி போன்ற பொருட்களை மிகவும் எடை குறைவாக வழங்கி வருகின்றனர் இது குறித்து பொதுமக்கள் விற்பனையாளரிடம் கேட்டால் ரவுடிகளை வைத்து மிரட்டி வருவதாகவும் அரிசி பருப்பு, சீனி, பாமாயில், கோதுமை போன்ற பொருட்களை கடத்தப்பட்டு வெளிச்சந்தையில் விற்கப்படுவதாகவும் ரேஷன் கடைக்கு தொடர்பு இல்லாத சில நபர்களை கடையில் அமர வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் பொருட்களை வழங்காமலேயே வழங்கப்பட்டதாக தொலைபேசியில் குறுஞ்செய்தி வருகின்றது.
எனவே இந்த குறிப்பிட்ட ரேஷன் கடையில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.