

நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல் நீதிமன்றங்களை சேர்ந்த 2000_க்கும் அதிகமான வழக்கறிஞர்கள்.குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் பால ஜனாதிபதியின் தலைமையில். பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.
குமரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் பால ஜனாதிபதியிடம்.

போராட்டத்தின் காரணம் பற்றி கேட்டபோது..,
தமிழகம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் வக்கீல்களுக்கு தொழில் ரீதியாக பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். வக்கீல்கள் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக உயர்ந்த வேண்டும்.. வக்கீல்கள் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் மீது பார் கவுன்சில் தனிப்பட்ட முறையில் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு, பாண்டிச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக பாலஜனாதிபதி தெரிவித்தார்.

