• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருநகர் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை, நூற்பு ஆலை நிர்வாகம் அடைத்ததால் ஆர்ப்பாட்டம்…

ByG.Suresh

Jan 2, 2024

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள திருநகர் பகுதியில் காளீஸ்வரர் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான நூற்பு ஆலை ஒன்று சுமார் 77 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது அந்த நுட்ப ஆலைக்கு எதிர்புறத்தில் திருநகர் பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், காளீஸ்வரர் நுட்ப ஆலைக்கு சொந்தமான காலி இடத்தை அப்பகுதி மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக பாதையாக பயன்படுத்தி வந்த நிலையில், காளீஸ்வரர் தேசிய பஞ்சாலை கழகம் நிர்வாகம் பாதையை திடீரென எச்சரிக்கை பலகை வைத்து அடைத்ததால் மீண்டும் அந்த பாதையை திறந்து விட வேண்டுமென சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் மற்றும் காளையார்கோவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கேப்டன் அருள்ராஜ் முன்னிலையில் திருநகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் அந்த பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.