• Fri. Jan 24th, 2025

கவர்னரை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

ByKalamegam Viswanathan

Jan 7, 2025

மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக, கவர்னரை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுக் குழு சேகர்,ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன் , பசும்பொன்மாறன், சிறைசெல்வன், தன்ராஜ், பரந்தாமன்,பேரூர் செயலாளர்கள் மு.பால்பாண்டி, சத்தியபிரகாஷ், ராகுபதி, மனோ, கரவேல் பாண்டியன், பேருராட்சி தலைவர் ஜெயராமன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், சி.பி.ஆர்.சரவணன் , பேரூர் அவை தலைவர் திரவியம், பேரூர் துணை செயலாளர்கள் ஜெயகாந்தன், கண்ணன், அய்யங்கோட்டை விஜயகுமார், இளைஞரணிபேரூர் செயலாளர் ஜி.பி. பிரபு, தகவல் தொழில்நுட்ட பிரிவு செயலாளர் அரவிந்தன்,எம்.எஸ்.முரளி,ராஜசேகரன்,வினோத், உள்பட பேரூர் ஒன்றிய, கிளை கழக, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கவர்னருக்க்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.