கொரோனா காலத்தில் தொடர்ந்து மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கி தொழிலாளர் வாழ்வில் ஒளியேற்ற வலியுறுத்தியும், பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை வழங்கிட கேட்டும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அக்டோபர் 18 ஆம் தேதியான இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.