• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தேனி அருகே சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

Byvignesh.P

Jul 1, 2022

தேனி அருகே பழனிசெட்டிபட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பனிமனை முன்பு CITU தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்கத்தின் சார்பில், தேனி கிளை தலைவர் முருகன் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் மற்ற அரசுத் துறைகளை போல போக்குவரத்து ஊழியர்களின் பணி ஓய்வு வழங்க வேண்டும் என்றும், 14வது ஊதிய பேச்சு வார்த்தையை பேசி உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் பாலயா சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தேனி கிளை செயலாளர் சுரேஷ் நன்றி கூற, தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க தேனி கிளை CITU நிர்வாகிகள், உறுப்பினர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.