திருப்பூர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை மரியாதை குறைவாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் மன்சூர் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வி.எஸ். கோவிந்தராஜ், கோ. கண்ணன், புருஷோத்தமன், ராஜேந்தர் பொன்னுச்சாமி ஜெயச்சந்திரன், தங்கராசு, அவனாசி சரவணன், பழனிச்சாமி வடக்கு தெற்கு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் சிறை பிடித்தனர்.