• Thu. Apr 25th, 2024

மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எல் ஐ சி ,எஸ் பி ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி குழுமத்திற்கு உறுதுனையாக இருக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து சேலம் கோட்டை பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே உத்தரவின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அறிவுறுத்தலின்படியும் முன்னாள் மத்திய அமைச்சர் கே வி தங்கபாலு ஆலோசனைப்படி சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் கோட்டை sbi வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹின்டென்பர்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு நாடாளுமன்ற குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தியும் LIC, SBI மற்றும் பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அதானி குழுமத்தில் மத்திய அரசு முதலீடு செய்ய நிர்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும், முதலீட்டாளர்களை பாதுகாக்க மத்திய அரசு சரியான தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சேலம் கோட்டை பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி அலுவலகம் முன்பு சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் கார்த்திக் தங்கபாலு அவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார் இதனை அடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் அறிக்கையை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் எம்டி. சுப்பிரமணி, மாநகர பொது செயலாளர் தாரை ராஜகணபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சப்பட்டி பழனி, சேக் இமாம், மாநகர துணை தலைவர் திருமுருகன், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், மாநில செயலாளர் வசந்தம் சரவணன், மெடிக்கல் பிரபு, சாநவாஸ், மாநில எஸ் சி எஸ் டி பிரிவு விஜய்தரன், 29 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரிஜா குமரேசன், மாநகர பொதுச்செயலாளர் வக்கீல் கார்த்தி, சீனிவாசன், மணிவண்ணன், அமைப்புசாரா மாணவர் பிரிவு வரதராஜ், சவுகத் அலி ,தாஜுன், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார், ராமன், நாகராஜ், பெரியசாமி, மோகன், கந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் ராஜ் பாலாஜி, விஜயராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து மாவட்ட தலைவர் செய்தியாளரிடம் பேசுகையில் எல்ஐசி மற்றும் எஸ் பி ஐ நிறுவங்கள் பொதுத்துறை நிறுவனங்களை அதானிக்கு விற்பனை செய்வதால் முதலீடு செய்த ஏழை, எளிய மக்களின் சொத்துக்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் முதலீட்டாளர்களின் 33,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *