• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேனி அருகே பேரூராட்சி கவுன்சிலர் துப்புரவு பணியாளர்களை ஒருமையில் பேசியதாக ஆர்ப்பாட்டம்

ByI.Sekar

Feb 9, 2024

தேனி மாவட்டம் தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மூணாவது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் பேரூராட்சி பணியாளர்களை ஒருமையில் பேசுவதும் வாடா போடா என்றும் பல அருவருக்கத்தக்க தகாத வார்த்தைகளாலும் வசை பாடி வருகிறார் எனவும் 31ஆம் தேதி நடந்த கவுன்சிலர் கூட்டத்தில் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலையில் அங்கு பணிபுரியும் பணியாளரை வாடா என்றும் போடா என்றும் கூறிவந்துள்ளார். இது இப்படி இருக்க பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்களை கடைக்கு சென்று சிகரெட் வாங்கிட்டு வா என்றும் எனது வீட்டிற்கு ஏண்டா இன்னும் தண்ணி எடுத்து விடவில்லை என்றும் அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தைகளாலும் தொடர்ந்து பேரூராட்சி பணியாளர்களிடம் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். இவர் மீது நடவடிக்கை வேண்டி சம்பந்தப்பட்ட பணியாளர், பேரூராட்சி தலைவரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். கவுன்சிலர் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இந்த நிலையில் இன்று பேரூராட்சி பணியாளர்கள் அனைவரும் செல்வராஜ் கண்டித்து ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சி இணை இயக்குனர் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுத்து பேரூராட்சி பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே இது போன்ற கவுன்சிலர்களின் அராஜக போக்கு மாறும் என பேரூராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.