

தேனி அருகே நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மூன்று பேர் இன்று உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு ஆயில் மில் அருகே வைத்து மர்ம கும்பல் அறிவாள் மற்றும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது., இந்த சம்பவம் தொடர்பாக தேனி அல்லிநகரம் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து கடந்த மூன்று ஆண்டுகளாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.,
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன், சின்னடொர்ரி என்ற குமரேசன், பாஸ்கரன் என்ற மூவர் இந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தங்களை போலிசார் தேடி வருவதாகவும், தங்களுக்கும் இந்த கொலை முயற்சிக்கும் சம்மந்தம் இல்லை என இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் முன்பு ஆஜராகினர்.,
இந்த வழக்கை விசாரித்த உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன், ஆஜரான மூன்று பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.,

