• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி ஸ்டெல்லா மேரீஸ் தொண்டு நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிப்பு

    கன்னியாகுமரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக.ஸ்டெல்லா மேரீஸ் என்னும் தொண்டு நிறுவனத்தை.கிறிஸ்தவ அருட் கன்னியர்கள் நடத்தி வருகின்றனர்.  தொழு நோயாளிகள் 43 பேர் தங்கியிருக்கும் தனி பகுதியை சேர்ந்த சுற்று சுவரும் அவர்கள் பயன் நாட்டிற்கான நடைபாதையும் உள்ளது.   தொழு நோயாளிகள் குடியிருப்பு பகுதிக்கு அடுத்து தனி சுற்று சுவருடன் தனியார் ஒருவரின் நிலம் உள்ளது. 
குறிப்பிட்ட இடத்திற்கு  முறையான வழித்தடம் இல்லாததால்.ரியல் எஸ்டேட் கும்பல் ஒன்று கடந்த 12_ம் தேதி.தொழுநோயாளிகள் குடியிருப்பு காலனி சுவரை இடித்தது.பாதை இல்லாத அவர்களது நிலத்தை விற்பனை செய்ய முயன்றதை கண்டித்தும்.தொண்டு நிறுவனத்திற்கு மட்டுமே உரிமை உள்ள நடை பாதையை தனியார் எவரும் பயன் படுத்துவதை.மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதுடன். அத்துமீறிய நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என.மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடமும் புகார் மனு கொடுத்தனர்.