• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரி, சமத்துவ மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

ByP.Thangapandi

Mar 4, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரியும், அரசுக்கு சொந்தமான வணிக வளாக கடைகளை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உசிலம்பட்டியில் புறவழிச் சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகமும், உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகமும் விரைந்து பேருந்து நிலைய பணிகளை முடிக்க கோரியும், வணிகர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டாம் என கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.