• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாநில மொழி தெரிந்தவர்களையே பணியில் அமர்த்த கோரிக்கை..,

ByT. Balasubramaniyam

Nov 17, 2025

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக உள்ள அஞ்சலகங்களில் தமிழ் தெரியாதவர்களைப் பணியிலமர்த்தப்படுவது கூடுதலாகிவருகிறது. இதனால் அஞ்சலகங்களில் கொடுக்கப்படும் தபால்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபர்களுக்குச் சென்றடைவது இல்லை. மேலும் தபால்களில் உள்ள முகவரிகள் மாற்று மொழிக்காரர்களால் புரிந்துகொள்ள முடியாமல் முகவர்களுக்குச் சரியாகச் சென்றடைவது இல்லை..

ஒரு நிகழ்ச்சிக்காக அனுப்பப்படும் தபால்களில் 50% மட்டுமே சென்றடைகிறது. மீதி தபால்கள் குப்பைத் தொட்டிகளுக்குச் செல்கிறது. உதாரணத்திற்குச்  சென்னை 54. ஆவடி அஞ்சலகத்தில் தமிழ் தெரியாத வடநாட்டைச் சார்ந்த ஒருவரை மத்தியரசு நியமித்துள்ளது. அவர் தபால்களைப் பெறும் இடத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவருக்குத் தமிழ் தெரியாததால் தமிழில் உள்ள முகவரி அவருக்குப் புரியாததால் பதிவஞ்சலில் அனுப்ப முடியவில்லை.

அது தொடர்பாக   மறைமலை அடிகளாரின் பேரன்  மறை. தாயுமானவன் 17-11-25 அன்று முற்பகல் 11 மணிக்கு அஞ்சலகத்தில் கோரிக்கை வைத்து விவாதித்துள்ளார். இந்த நிலை ஆவடி அஞ்சலகத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் பல இடங்களில் நடக்கிறது. எனவே நடுவன் அரசு அஞ்சலகங்களில் அந்தந்த மாநில மொழிகளைப் படித்தவர்களை பணியமர்த்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.