
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சிவகாசி கிளை சார்பாக, சங்கத்தின் மாநில தலைவர் எழுத்தாளர் தமிழ்செல்வன் எழுதிய “தெய்வமே சாட்சி” நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது! விழாவில், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் K.S.சண்முகக்கனி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிஞர்.பாலபாரதி, தமுஎச தலைவர்(பொ) மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ் முஹம்மத், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராமலிங்கம், ஹவுசிங் போர்டு கிளை கழக செயலாளர் கண்ணன் தமுஎசவின் நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் இலக்கிய விமர்சகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
