மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினர் அஜித்குமாரை அடித்து துன்புறுத்தியதாக வீடியோ வெளியிட்ட சக்தீஸ்வரன் என்பவருக்கு கொலை மிரட்டல் இருந்து வருவதன் காரணமாக அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புக்கு இருந்து வருகின்றனர்.

இதனிடையே சக்தீஸ்வரன் சஷ்டி விரதத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையில் உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துக்கொண்டு தனது காரில் வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் புதூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது காரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகின்றது.

இதனால் அச்சமடைந்த சக்தீஸ்வரன் திட்டமிட்டு வாகனத்தை இடித்துவிட்டு நிற்காமல் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மதுரை மாநகர் புதூர் காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்தார். தொடர்ந்து வாகனத்தை நிறுத்தாமல் சென்றவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலைச் சேர்ந்த பிரபல கொரியர் நிறுவனத்தின் ஓட்டுநர் கார்த்திக் என்பதும் தெரியவந்ததையடுத்து கார்த்திக்கிடம் நடந்த சம்பவத்தை பற்றி எழுதி வாங்கிகொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய சக்தீஸ்வரன்,” கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர் கார்த்திக்ராஜா என்பவருக்கும் இதேபோல ஒரு நிகழ்வு நடந்தது. அது யாரென்று இதுவரை தெரியவில்லை. கொரியர் வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் சென்றதன் அடிப்படையிலேயே காவல்நிலையத்தில் புகார் அளித்தேன்”என்றார்.













; ?>)
; ?>)
; ?>)