பருவநிலை உச்சிமாநாடு நடைபெறும் அஜர்பைஜானில் ‘இறந்த திமிங்கல மாதிரி’ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலக தலைவர்கள் பங்கேற்கும், 2 நாள் பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாடு (சிஓபி29) அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நவம்பர் 11 தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை நடைபெற்று வரும் நிலையில், பாகு கடற்கரையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ‘இறந்த திமிங்கல மாதிரி’ கவனம் பெற்றுள்ளது. காயங்களில் இறந்து ரத்தம் வழிந்து உறைந்து திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியிருப்பது போல் மிகத் தத்ரூபமாக இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேப்டன் பூமர் என்பவர் உருவாக்கியுள்ள இந்த திமிங்கல மாதிரி பருவநிலை மாற்றம் திமிங்கல வகை மீன்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கூடவே பருவநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திமிங்கல மாதிரியைக் காண பாகு நகரவாசிகள் கூட்டம் கூட்டமாகக் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.
கவனம் ஈர்த்த ‘இறந்த திமிங்கல மாதிரி’
