

மதுரை அருகே வறண்டு வரும் வைகையால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் வரும் என்பதால், வீடுகளில் மழை நீர் தொட்டி அமைத்து நீரை சேமிக்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள வைகை ஆறானது நீரின்றி கடந்த சில நாட்களாக வறண்டு காணப்படும் நிலையில் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் சோழவந்தானிலிருந்து திருமங்கலத்திற்கும் சோழவந்தான் அருகில் தச்சம்பத்து மேலக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து மதுரை அவனியாபுரம் செக்கானூரணி கருமாத்தூர் போன்ற பகுதிகளுக்கும் வைகை ஆற்றில் குடிநீர் தொட்டிகள் அமைத்து குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக நீர்வரத்து இன்றி வைகை ஆறு வறண்டு காணப்படுவதால் வரும் காலங்களில் இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆகையால் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை வீடுகளில் மழை நீர் தொட்டி மூலம் சேமித்து வைத்து பாதுகாப்பதன் மூலம் குடிநீர் பஞ்சத்தை தவிர்க்கலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

