பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரான தண்டட்டி கடந்த ஜூன் 23ல் திரையரங்கில் வெளியாகியது. பின் ஜூலை 14ந் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது.
கிராமத்து வாழ்வியலை, தண்டட்டி என்ற அப்பத்தாக்கள் அணிந்திருக்கும் நகையை வைத்து அழகுறச் சொல்லியிருந்த இப்படம் வெகு வரவேற்பை பெற்று வருகிறது.
நல்ல சினிமா என மக்கள் பார்த்துக் கொண்டாடும் ஒரு படமாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. நல்ல சினிமாக்களை கொண்டாடும் ரசிகர்கள் மத்தியில் தண்டட்டி சென்று சேர்ந்துள்ளது.
அதன் காரணமாக வெளியிட்ட நாள் முதல் இன்று வரை அமேசான் பிரைமில் தண்டட்டி முதலிடத்தில் இருக்கிறது.