• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மின் கம்பங்கள் சேதம் இருளில் ழூழ்கிய கிராமங்கள் – பொதுமக்கள் அவதி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின்வினியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மேல் பஜார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி பின்புறம் தனியார் தேயிலைத் தோட்டத்தில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் போது அருகே இருந்த மின்கம்பத்தின் மீது மரம் விழுந்ததில் மூன்று மின்கம்பங்கள் சேதமடைந்தது.

மின்கம்பம் மீது மரம் விழுந்ததால் மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிண்ணக்கெரை, கேரண்டின் தாய் சோலை ,மேல் குந்தா, கோரக்குந்தா, தெட்டக்கொம்பை, பிக்கட்டி பெரியார் நகர், பள்ளிமலை, கரிய மலை ,கண்டிசேரனூர், காந்திபுரம், கெட்சி கட்டி, முள்ளிமலை, மஞ்சூர் கீழ்குந்தா, ஓணிக் கண்டி, மட்டக்கண்டி, தூனேரி போன்ற பகுதிகளில் இரண்டு மணி முதல் மின்விநியோகம் தடைபட்டு தற்போது வரை மின்வினியோகம் வராததால் வணிகர்கள் பொதுமக்கள் அவதி