• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு எம்.வி கருப்பையா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை..,

ByKalamegam Viswanathan

May 24, 2026

பெரும்பிடுகு முத்தரையர் 1351 வது சத்ய விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சறந்தாங்கியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

முன்னதாக சரந்தாங்கி பேருந்து நிலையப் பகுதியிலிருந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து சறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரும்பிடுக முத்தரையர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா வழக்கறிஞர் தியாகு தாமு சரவணன் அலங்காநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலாஜி பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா மற்றும் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.