பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின் செய்தவர் ஆரவ். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.
ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா இவர் மீது தீராத காதலில் இருந்தார். இது பெரும் சர்ச்சையாகவும் போனது.இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகை ராஹி என்பவரை ஆரவ் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் பல திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.திருமணத்திற்குப் பிறகு ஆரவ்- ராஹி ஜோடி பற்றிய எந்த வித அப்டேட்-ம் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஆரவ் மற்றும் ராஹி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவான சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் ஆரவ்க்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.