கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து, ரூ.900-க்கு விற்பனையாகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலைகளை தினசரி மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் சமையல் எரிவாயுவின் விலை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலை ரூ.875 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், செப்.1-ஆம் தேதியான இன்று, சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 அதிகரித்து, ரூ.900-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.285 அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.