• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சைபர் கிரைம் போலீசும், கல்லூரி மாணவ, மாணவி, பொதுமக்களும் பேரணி

ByP.Thangapandi

Aug 27, 2024

உசிலம்பட்டியில் சைபர் கிரைம் காவல் துறை சார்பில், கல்லூரி மாணவ- மாணவிகளுடன் இணைந்து பொதுமக்கள் பேரணி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவ – மாணவிகளுடன் இணைந்து மதுரை மாவட்ட சைபர் க்ரைம் காவல் துறையினர் மற்றும் உசிலம்பட்டி காவல் துறையினருடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் சிம் கார்டு, வாட்ஸ் அப், டெலிகிராம் மூலம் பெறப்படும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், பார்ட் டைம் ஜாப், யூடூப் லிங்க் மூலம் பணம் கட்ட சொன்னால் பணம் கட்டாதீர், தேவையற்ற லிங்கை கிளிக் செய்யக் கூறினால் கிளிக் செய்யாதீர்கள், தெரியாத எண்ணில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என பல்வேறு விழிப்புணர்வு குறித்த வாசகங்களுடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வர் ஜோதி ராஜன் முன்னிலையில் மதுரை சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கருப்பையா
கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி உசிலம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக தேவர் சிலையை வந்து அடைந்தது.

இந்த பேரணியில் உசிலம்பட்டி டிஎஸ்பி விஜயகுமார் இன்ஸ்பெக்டர்கள் பிரியா, ஆனந்த், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.