• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித் தர வாடிக்கையாளர்கள் கோரிக்கை

Byadmin

Feb 8, 2024

சோழவந்தானில் தபால் நிலையம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டாமல் காலி இடமாக இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அவலம் அரங்கேறி வருகிறது சோழவந்தான் பஸ் நிலையம் அருகே தபால் நிலையத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்தும் பல ஆண்டுகளாக அங்கு தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டாதால் முள் அடர்ந்த பகுதியாக இருந்த நிலையில் வாடிக்கையாளர்கள் தபால் நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவித்ததன் பேரில் அப்பகுதியில் உள்ள முள் செடிகளை அப்புறப்படுத்தினர் இருந்தாலும் அந்த காலி இடத்தில் சமூகவிரோதிகள் தங்கி பல தவறுகளை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இது குறித்து சம்பந்தப்பட்ட தபால் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் காலி இடத்தில் தபால் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டி ஏற்கனவே சோழவந்தானில் மூடப்பட்ட வடக்கு தெற்கு தபால் நிலையங்களை இணைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் இங்கு கட்டப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.