• Wed. Apr 23rd, 2025

கிரசன்ட் பள்ளியின் வெள்ளி விழா..,

ByG. Anbalagan

Apr 8, 2025

நீலகிரி மாவட்டம் உதகை கிரசன்ட் பள்ளியின் வெள்ளி விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

பெங்களூர் விமான இயக்கவியல் குழு -யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய விஞ்ஞானி சி. பிரபு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளார்களிடம் பேசிய அவர் அறிவியல் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் முன்னேற்ற மூல கூறுகள் உள்ளது அதை இன்றைய மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தற்போதைய சூழலில் மாணவ, மாணவிகளின் கவனத்தை கலைய வேறு பக்கம் திருப்ப வாட்சாப், இன்ஸ்டாகரம் போன்ற  பல்வேறு சூழல்கள் உள்ளது. அதை தவிர்த்து வாழ்வியலில் கவனம் செலுத்தும் போது  நல்ல பலன் கிடைக்கிறது என்றார்.

பொறியியல் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் அறிவியல் ,கணிதம்,என பல துறையிலும் வேலை வாய்ப்புகள் உள்ளது. தற்போது டெக்னாலஜி சிறப்பாக உள்ளது கவனத்தை சிதறவிடாமல் சிறப்பாக செயல்படுபவர்கள் வெற்றி் பெற முடியும் என்றார்.

இன்றைய மாணவர்கள் ஏழை குடும்பத்தில் பிறந்த ஆராய்ச்சியாளர்களாய் மாறியுள்ள எங்களை போன்றவர்களை பார்த்து அவர்களும் அறிவியல் துறையில் வர உத்வேகமாக இருந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான் என தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் வண்ண வண்ண உடையில் கலை நிகழ்ச்சிகள், கலை இலக்கியம், நாட்டுபற்று என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அங்கு குட்டி தேவதைகள் தங்கள் பெருமைமிக்க பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் தங்கள் கலகலப்பான, வண்ண மயமான கலாச்சார நிகழ்ச்சிகளால் மகிழ்வித்து, சிறப்பு விருந்தினரிடம்  விருதுகளைப் பெற்றனர்.

கல்வி, விளையாட்டு மற்றும் பிற பாடத்திட்ட நடவடிக்கைகளுக்காக வெற்றி பெற்றவர்களுக்கு பிரதம விருந்தினர் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி கௌரவித்தார்.