உலக சமையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு, மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் கலைஞர்களுக்கான கைவினை திறன் போட்டி நடைபெற்றது.
தென்னிந்தியாவில் நடைபெற்ற சமையல் கலைஞர்களுக்கான கைவினைத்திறன் போட்டியில் பெல் ஹோட்டல் மாணவர்கள் முதல் பரிசினையும், சுப்புலட்சுமி லட்சுமிபதி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இரண்டாம் பரிசினை பெற்றனர்.
வரும் அக்டோபர் 30 அன்று உலக சமையல் கலைஞர்கள் தினம் கொண்டாடப்படுவதை யொட்டி, சமையல் கலைஞர்களுக்கான கைவினைத்திறன் மற்றும் மேஜை அலங்கார பொருட்கள் உருவாக்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கைவினைத் திறன் போட்டி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அமிக்கா ஹோட்டல் பொது மேலாளர் பால் அதிசய ராஜ் போட்டியை துவக்கி வைத்தார். முதன்மை சமையல் கலைஞர் கோபி விருமாண்டி மற்றும் சமையல் கலைஞர்கள் மேற்பார்வையில் பூசணிக்காய் தர்பூசணி மற்றும் கேரட் ,வெள்ளரி, குடைமிளகாய், பீட்ரூட் போன்ற காய்களில் கலைநய மிக்க அலங்காரபடுத்தும் போட்டியில் சுப்புலட்சுமி லட்சுமிபதி கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், மற்றும் பெல் ஹோட்டல், அன்னை பாத்திமா கேட்டரிங் கல்லூரி, பாரதி இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், , பாஸ்டன் கேட்டரிங், செயின்ட் மேரிஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட 6 கல்லூரிகளிலிருந்து 5 மாணவர்கள் வீதம் 30 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர.
சமையல் கலை பயிலும் மாணவர்கள் தங்கள் கைவினை திறமையால் கண்கவரும் வகையில் பார்வையாளர்களை கவரும் விதமாக அழகிய வடிவில் வடிவமைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு நடுவராக அமெரிக்கன் கல்லூரி விஸ்காம் துறை பேராசிரியர் நகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் கைவினை திறமையால் உருவாக்கிய பொருட்களுக்கு மதிப்பெண் வழங்கினார்.
மேலும் 6 குழுக்களில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து முதல் பரிசாக கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் பரிசினை பெல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் பெற்றனர்.
இரண்டாவது பரிசாக கேடயம், சான்றிதழும் சுப்புலட்சுமி லெஷ்மிபதி கல்லூரி மாணவர்கள் பெற்றனர். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
உலக சமையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கார்விங் போட்டிக்கு மாணவர்களுக்கு நிர்வாக இயக்குநர் பத்மகுமார் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் பரிசினை வழங்கினார்.
பின்னர் சமையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் அமைக்க ஹோட்டல் பொது மேலாளர் கூறுகையில்..,
மதுரை அமிக்கா ஓட்டல் சார்பாக உலக சமையல்கலைஞ்சர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் நட்சத்திர ஓட்டலில் பணிபுரிய தயாராகும் சமையல் கலைஞர்களுக்கு தங்கள் கைவினை திறனை வளர்க்கும் பொருட்டு பழங்கள் காய்கறிகளில் அழகிய கைவினை பொருட்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் முதன்முறையாக சமையல்களை படிக்கும் மாணவர்கள் தங்கள் கைத்திறனை வளர்க்க கார்விங் கைவினை திறன் போட்டி நடைபெற்றது. இதில் ஆறு கல்லூரிகளை சேர்ந்த 30 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் உள்நாடு மட்டுமல்லாமல் அயல்நாடுகளிலும் வேலைவாய்ப்பில் அவர்கள் தங்கள் கைத்திறனை வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக அமையும். அதற்கு முன்னோட்டமாகவே இந்த பயிற்சி இறங்கு நடைபெற்றது.
உலக சமையல் கலைஞர்கள் தின கைவினைத்திறன் போட்டிக்கான ஏற்பாடுகளை அமிக்கா ஹோட்டல் முதன்மை சமயக் கலைஞர் கோபி விருமாண்டி மற்றும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.