

தொட்டில் குழந்தை திட்டத்திற்கு இலவசமாக தொட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவ மனை யில் தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்திற்க தொட்டில்கள்வழங்கும நிகழ்ச்சி நடை பெற்றது.

மருத்துவ அலுவலர் வெங்க டேசன் தலைமை வகித்தார். லயன்ஸ் மகளிர் கிளப் தலைவர் ராசாத்தி முன்னிலை வகித்தார் . தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்திற்கு மகளிர் லயன்ஸ் கிளப் சாரபாக தொட்டில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமை செவிலியர் வாசுகி, செவிலியர்கள் மஞ்சுளா, மலர் லயன் மகளிர் கிளப் தலைவர ராசாத்தி ,செயலாளர். கீதா, பொருளாளர ரூபி மற்றும் இயக்கு நர்கள் கலந்து
கொண்டனர்.

