• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாடு முட்டியதில் மாடுபிடி வீரர் அய்யனார் உயிரிழப்பு

ByKalamegam Viswanathan

Apr 30, 2025

கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் மதுரை வளையங்குளத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அய்யனார் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கடந்த ஜனவரி மூன்றாவது வாரம் முதல் வாரம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தனிநபர் நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டிஇன்று காலை தொடங்கி நடைபெற்றது இந்த நிலையில் மதுரை வளையங்குலத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அய்யனார் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் மதுரை கீழக்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியானது முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் போதிய அடிப்படை வசதிகள் செய்யாமலும் நடைபெற்று வருவதால் தொடர்ச்சியாக மாடுபிடி வீரர்கள் காளை உரிமையாளர்கள் உயிரிழந்து வருவது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த வாரத்தில் மாட்டின் உரிமையாளரும் அதற்கு முந்திய வாரம் மாடுபிடி வீரரும் உயிரிழந்த நிலையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் முறையான பாதுகாப்பின்றி நடைபெறும் இது போன்ற ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நீதிமன்றங்கள் தடை விதிக்க வேண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் அரசும் இளைஞர்களின் உயிரை கவனத்தில் கொண்டு, இது போன்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.