• Fri. Mar 29th, 2024

110 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின்

Byமதி

Nov 19, 2021

இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 110 நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மும்மரமாக பலவேறு நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை கொரோனா தடுப்பூசி செலுத்தக்கொண்டோரின் எண்ணிக்கை 116 கோடியை நெருங்கியுள்ளது.

இதற்கிடையே, கல்வி, சுற்றுலா உள்பட பல்வேறு காரணங்களுக்காக நம் நாட்டு மக்கள் பிற நாடுகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் வழங்கப்படும் சான்றிதழை ஏற்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்தியா வழங்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 110 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரேசில், குவைத், ஈரான், கத்தார் உள்பட 110 நாடுகள் இப்பட்டியலில் அடங்கும். பிற நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed