• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காரைக்குடியில் வீர விளையாட்டு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் மாட்டுவண்டி பந்தயம்

காரைக்குடியில் வீர விளையாட்டு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் 35 ஜோடிகள் பங்கேற்றனர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீர விளையாட்டு காளைகள் ஒருங்கிணைப்பு நலச் சங்கத்தின் சார்பாக, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், மதுரை சிவகங்கை, புதுகோட்டை, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 35 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில், பெரிய மாட்டிற்கு 9 கிலோமீட்டரும், சின்ன மாட்டிற்கு 6 கிலோ மீட்டரும் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரிய மாட்டிற்கு 50,001 முதல் பரிசாகவும்,சின்ன மாட்டிற்கு 30 ஆயிரம் ரூபாய் முதல் பரிசாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பெரிய மாட்டில் மதுரை மாவட்ட அவனியாபுரம் ஜோடி மாடுகளும்,சின்ன மாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாடுகளும் முதலாவதாக வந்து பரிசினை தட்டிச் சென்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும்,சாரதிகளுக்கும் ரொக்கபரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டிபந்தயத்தை ஏராளமான பார்வையாளர்கள் சாலைகளின் இருபுறங்களிலும் திரளாக நின்று கண்டு ரசித்தனா்.