கோவை, வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா அருவி, கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி இன்று (24-05-2025) தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறை அறிவித்து உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து பெருமளவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அருவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதேபோல இன்று மற்றும் நாளை கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வனத்துறை இந்த தற்காலிக மூடல் முடிவை எடுத்து உள்ளது.
அருவியில் நீர்வரத்து சீராகும் வரை இந்த கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்படும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வனத் துறையின் இந்த அறிவிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளனர்.