• Fri. Jul 18th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

கோவை நீலகிரி நாளை மற்றும் மறுநாள் ரெட் அலர்ட்!

BySeenu

May 24, 2025

கோவையில் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது தற்போது கோவையில் சாரல் மழை பெய்து வருகிறது..!

கோவை நீலகிரி பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.தேசிய பேரிடர் மீட்புக் குழு வால்பாறை சென்று உள்ளது. கோவை சுங்கம் சிவராம் நகர் பகுதியில் மாநில பேரிடர் குழு 90 பேர் வந்து உள்ளனர்.

மீட்புக் குழுவில் 30 பேர் ஒரு குழுவாக செயல்படுவார்கள் என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநில பேரிடர் மீட்பு குழு இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பல்வேறு பகுதிகளில் மிகவும் உதவி உள்ளது.

கோவையில் பலத்த மழை பெய்தால் நான்கு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். ஒன்று சிவானந்த காலனி மேம்பாலத்திற்கு அடியிலும், ரயில் நிலையம் மேம்பாலத்திற்கு அடியிலும், உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் அடியிலும், கிக்கானி பள்ளி மேம்பாலத்தில் அடியிலும் மழைநீர் தேங்கிவிடும். அதனை அடுத்து பெரிய மோட்டார் கொண்டு மழை நீர் வெளியேற்றப்படும்.

கோவை பொறுத்த வரை பல்வேறு சாலையில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. மழை அதிகளவு வந்தால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆகவே மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.