• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அயலான் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் சொந்த தயாரிப்பாக இருந்தாலும், வெளி கம்பெனி தயாரித்த படமாக இருந்தாலும் வெளியீட்டு நேரத்தில் சிக்கல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது அதேபோன்று தான் அயலான் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.


ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் தயாராகி வரும் படம் அயலான்இதன் படப்பிடிப்பு ஏராளமான தடைகளை கடந்து படப்பிடிப்பு தற்போது முடிந்து இறுதிக் கட்டப்பணிகள். பணிகள் நடந்து வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்நிலையில் ஜேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அயலான் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், 24 ஏ.எம். நிறுவனம், தங்களிடம் பெற்ற 5 கோடி கடன் தொகையை, வட்டியுடன் சேர்த்து ரூ. 6 கோடியே 92 லட்சம் ரூபாய் திருப்பி தர வேண்டி உள்ளது. அந்த பணத்தை தராமல் அயலான் படத்தை வெளியிடவோ, விநியோகம் செய்யவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று(23.12.2021) விசாரணைக்கு வந்தபோது, ‛அயலான்’ படத்தை ஜன., 3 வரை வெளியிட இடைக்கால தடை விதித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜன.3க்கு தள்ளி வைத்து ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.