• Thu. Apr 25th, 2024

மன்னர் சார்லஸ்-க்கு முடிசூட்டு விழா..

Byகாயத்ரி

Oct 6, 2022

பல ஆண்டுகாலம் ஆட்சிசெய்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 8ம் தேதி உயிரிழந்தார். இதனால் இங்கிலாந்தே ஸ்தம்பித்து நின்றது. ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார்.

73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் என்ற பெருமையும் பெற்றார். கடந்த மாதம் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற எளிய விழாவில், மன்னராக பொறுப்பேதற்காக ஆவணத்தில் கையெழுத்திட்டார் மூன்றாம் சார்லஸ். இந்நிலையில், மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழாவானது அடுத்தாண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி லண்டனில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக்கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார் என தெரிகிறது. ராணி இரண்டாம் எலிசபெத் 1953 இல் முடிசூட்டப்பட்டபோது, 129 நாடுகளைச் சேர்ந்த 8,000 விருந்தினர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *