• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா!

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் சமீப காலமாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் ஒமைக்ரானும் தன் பங்கிற்கு அச்சுறுத்தி வருகிறது ..

நடிகர் அர்ஜுன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நகைச்சுவை நடிகை வடிவேலு உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இந்நிலையில், தற்போது நடிகர் அருண் விஜய்யும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட பதிவில், ” அனைவருக்கும் வணக்கம்.. நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்.. அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.. மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமை படுத்திக்கொண்டேன்.. அனைத்து பாதுகாப்பி வழிமுறைகளையும் பின்பற்றி வருகின்றேன்.. அனைவரது அன்புக்கும் நன்றி… அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்..!” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘யானை’, ‘பார்டர்’உள்ளிட்டப் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. அண்மையில் யானை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது..